«
»
TwitterFacebookGoogle+

விமர்சனம் பற்றி விமர்சகர்களுடன்…..

விமர்சனம் தனி மனித, சமூக மாற்றத்திற்கான முதற்படியாகும். மனிதனும் சமூகமும் தன்னில். உள்ள பலவீனங்களுக்கெதிராக போராடுவதே விமர்சனம் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.

தன்னை விமர்சிக்கும் துணிவு உள்ளவர்கள் மட்டுமே பிறரையும்,சமூகத்தையும் விமர்சிக்கும்அருகதையை பெறுகிறார்கள்.தன்னில் உள்ளவற்றை விமர்சிக்க விருப்பமின்றி அல்லது துணிவின்றி அல்லது சந்தர்ப்பவாதியாக இருந்து கொண்டு பிறரையும்,பிற சமுகங்களையும்விமர்சிக்க முன்வருவது என்பது ஆக்கிரமிப்பின் ஒரு வடிவம் என்பதே எமது கருத்தாகும்.

இன்று இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் நாம் சந்திக்கும் புத்திஜீவிகள், ஊடகவியலார்கள், சிந்தனையாளர்கள், கல்வியலாளர்கள் எல்லோரும் தன்னையும் தமது சமூகத்தையும் விமர்சனத்திற்குட்படுத்தாது மற்றவர்களையும்,மற்ற சமூகங்களையும் நோக்கியே தமது சுட்டுவிரலை நீட்டுகின்றனர்.பேனாவை பயன்படுத்துகின்றனர்.ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கெதிராக தனது புலமையையும்,பேனாவையும் பயன்படுத்துவதென்பது அந்த மக்கள் கூட்டத்திற்கெதிரான யுத்தப்பிரகடனமாகும். இவ்வாறானவர்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப்பட்டு;ள்ளதை மக்கள் கண்டுவருகிறார்கள்.

இவ் இணையம் இலங்கையி;ல் ஒடுக்கப்பட்ட மக்களின் விமர்சனங்களை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு சிறு முயற்சியாகும். இந்த முயற்சியில் சில தமிழ் பேசும் மனிதர்கள்
ஒன்றிணைந்து உழைத்துள்ளோம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களாக பின்வரும் சமூகக் கூட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

01.சிங்கள இன ஆட்சியாளர்களால்,மத நிறுவனங்களால் ஒடுக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்களும்,மலையக தமிழ் மக்களும்,சிங்கள அடித்தட்டு மக்களும்

02.யுத்த வெறி கொண்ட ஜனநாயக விரோத வடக்கு மேலாதிக்க தமிழ் தலைமைகள்,இயக்கங்கள்,தனி நபர்களால் ஒடுக்கப்படும் கிழக்கு தமிழ் மக்கள்,முஸ்லிம் மக்கள்.மலையக மக்களும்,வடக்கு,கிழக்கு எல்லைக் கிராம சிங்கள மக்களும்,சாதியடிப்படையில் தாழ்த்தப்படும் யாழ்,வன்னி மக்கள் பிரிவினரும்.

உலகில் யுத்தம் ஆக்கிரமிப்பு இனஅழிப்பு இனப்படுகொலை சித்திரவதை நிலப்பறிப்பு சுரண்டல் தேர்தல் மோசடி கள்ள வாக்களிப்பு கப்பம் கடத்தல் பாலியல் வல்லுறவு எல்லாமே ஒடுக்குமுறையின் குறியீடுகளாகவே இனம் காணப்படுகின்றன.இவற்றை யார் செய்தாலும் அவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களுமே.

விமர்சனம் இணையத்தளத்தில் மதம் மத நம்பிக்கைகள்,மனிதர்களின் தனிப்பட்டநடத்தைக் கோலங்கள் தவிர்ந்த மக்கள் சமூகத்திற்கு தேவையான கல்வி,பொருளாதாரம்,அரசியல், கலாசாரம் என்று எந்த அம்சத்தையும் நேர்மையாக விமர்சிக்க களம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.எல்லா விமர்சனங்களும் நல்வழிபடுத்துவதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கமாக இருக்க கூடாது என்பதே எமது அடிப்படை வேண்டுகோளாகும். அத்துடன் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக செய்கின்ற பிரச்சாரத்திற்கு பதில் அளிப்பதற்கான களமாகவும் மக்கள் இதைப் பயன்படுத்த வேண்டுமெனஅழைப்பு விடு;க்கின்றோம்.

அன்புடன்

ஆசிரியர் குழு
விமர்சனம் இணையத்தளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>