«
»
TwitterFacebookGoogle+

மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் நடிகை ஸ்ரீதேவி!

வட இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது தான் கர்வா சவுத். இது எதற்கு கொண்டாடப்படுகிறது என்றால் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். மேலும் மாலை வேளையில் திருமணமான பெண்கள் அனைவரும் ஒன்று கூடி பூஜை செய்வார்கள்.
அத்தகைய கர்வா சவுத் கொண்டாட்டத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் பங்கு கொண்டார். அப்படி பங்கு கொள்ளும் போது அவர் டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த லேஸ் புடவையை அணிந்து வந்திருந்தார்.13-1-sridevi

அதிலும் இந்த மஞ்சள் நிற புடவைக்கு அவர் அணிந்து வந்த எம்பிராய்டரி ஜாக்கெட், அந்த புடவையை இன்னும் அழகாக வெளிக்காட்டியது. மேலும் ஸ்ரீதேவி இந்த புடவைக்கு அற்புதமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் உதடுகளுக்கு அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் அணிந்து, வட்ட வடிவில் பொட்டு வைத்து, கண்களுக்கு கண்மை போட்டு வந்திருந்தார்.13-2-sridevi3

குறிப்பாக ஸ்ரீதேவி புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணி, பச்சையான கற்கள் பதிக்கப்பட்ட பட்டையான நெக்லேஸ் போட்டு வந்தது அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.
13-3-sridevi2

அதுமட்டுமின்றி, ஸ்ரீதேவி இந்திய பெண்களின் பாரம்பரிய ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு, அதனைச் சுற்றி மல்லிகைப் பூ வைத்து வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
நகைக்கடை திறப்பிற்கு அழகாக புடவையில் வந்த வித்யா பாலன்!
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் வந்திருந்தார்.
இவருக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது அழகாக புடவைகளிலேயே வருவார்.
அந்த வகையில் இந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு பிரபல டிசைனர் டிசைன் செய்த புடவையில் வந்திருந்தார். சரி, இப்போது நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.27-1411810046-x26-v1

புடவையில் வித்யா பாலன்
இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த சிவப்பு நிற புடவை. இந்த புடவையானது வைசாலி என்னும் டிசைனர் வடிவமைத்தது.27-1411810053-x26-v2

பெரிய பொட்டு
வித்யா பாலன் இந்த புடவையில் அழகாக காணப்படுவதற்கு அவர் நெற்றியில் வைத்து வைத்து பெரிய பொட்டு தான் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த பெரிய பொட்டினால் அவர் மங்களகரமாக காணப்பட்டார்.
27-1411810059-x26-v3

ஆபரணங்கள்
வித்யா பாலன் கழுத்திற்கு நாணயம் வடிவிலான கழுத்தணியையும், காதுக்கு ஜமிக்கி மற்றும் கைக்கு பட்டையான பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.
27-1411810066-x26-v4

வித்யா பாலனின் ஸ்டைல்
வித்யா பாலன் புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு, சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>