«
»
TwitterFacebookGoogle+

ரயிலில் சீட்டுக்காக ஆடையை கிழித்து கேவலமாக சண்டை போட்ட 2 பெண்கள்: தீயாக பரவும் வீடியோ

பெய்ஜிங்: சீனாவில் சப்வே ரயிலில் இருக்கைக்காக இரண்டு பெண்கள் மோசமாக சண்டை போட்டு ஒருவரின் ஆடையை மற்றொருவர் கிழித்த சம்பவம் நடந்துள்ளது. சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு பெண்கள் சப்வே ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது ரயிலில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர அவர்கள் இருவரும் போட்டி போட்டுள்ளனர்.

இருக்கை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் திட்டிக் கொண்ட அந்த பெண்களின் மோதல் திடீர் என்று அடுத்த கட்டத்தை எட்டியது. இருவரும் அத்தனை பயணிகள் முன்பு ஒருவரின் ஆடையை மற்றொருவர் கிழித்து சண்டையிட்டனர்.

இதை ரயிலில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இரண்டு பெண்கள் ஆடைகளை கிழித்து சண்டை போட்டதை பிற பயணிகள் வேடிக்கை பார்த்து ரசித்தார்களே தவிர யாரும் அவர்களை விலக்கிவிட முயற்சி செய்யவில்லை.

அவர்கள் சண்டை போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பெண்களின் ஆடை கிழிப்பு சண்டை வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>