«
»
TwitterFacebookGoogle+

புலிகளை அழிப்பதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணையும்

இலங்கையில் நான்கு தசாப்த ஆயுதப் போராட்டம் சந்தர்ப்பவாதிகளையும், விதேசிகளையும், சமூக விரோதிகளைம் மட்டுமே உற்பதி செய்திருக்கிறது.

அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது அமெரிக்கவிற்கு எதிரான நாடுகள் அதனை எதிர்த்தன.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இலங்கையில் வர்த்தக நலன்கள் காணப்பட்டமையால் எதிர்ப்பை வெளியிட்டன.

வெனிசூலா போன்ற அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்தன.

வெனிசூலா போன்ற நாடுகளைப் பொறுத்தவரைக்கும் இவ்வகையான தீர்மனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நலன்களைச் சார்ந்தவையே தவிர மக்களின் நலன் சார்ந்தவை அல்ல என்பது தெளிவாகத் தெரிந்த் ஒன்று.

இதே போன்று தான் பல்வேறு இடதுசாரிகளும், ஜனநாயாக முற்போக்கு சக்திகளும் அமெரிக்கத் தீர்மானம் என்பது அடிப்படையில் இலங்கையில் தலையிட்டு சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையை மட்டுமல்ல அனைத்து இலங்கையையும் அழிக்கும் ஆயுதமாகப் பயன்படும் என்று கருதினார்கள்.

அமெரிக்க தீர்மானத்தைப் பயன்படுத்தி இனப்படுகொலையை உலக மக்கள் மத்தியிலும், உலககின் ஜனநாயக சக்திகள் மத்தியிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்வதற்கு தமிழர்கள் மத்தியில் வலுவான அரசியல் தலைமை இருந்திருக்கவில்லை,

அமெரிக்க அரசும் அது சார்ந்த உளவு நிறுவனங்களும் தமிழர் தலைமைகளை உள்வாங்கியிருந்தன.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் அரசியல் தலைமைகள் என்று கூறிகொள்ளும் அமைப்புக்களில் பொதுவாக அனைத்து அமைப்புக்களுமே ஐரோப்பிய அமெரிக்க அரசுகளோடும்,

நாடுகளின் உளவு நிறுவனங்களோடும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தன. ஒரு வகையில் இவ்வமைப்புக்கள் உளவு நிறுவனங்களால் வழி நடத்தப்பட்டு வந்தன.

சில அமைப்புக்கள் உளவு நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு வேலைகளிலும் ஈடுபட்டுவந்தன.

புலிகளின் ஆயுதப் போராட்ட்டம் என்பது 2000 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கும் , இந்திய அரச அதிகாரத்திற்கும் தேவையற்ற ஒன்றாக மாற்றமடைந்தது.

இலங்கையை வர்த்தகப் பரிமாற்ற மையமாகவும், தெற்காசியாவின் இராணுவ மையமாகவும் மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்த நோக்கங்களுக்குத் தடையாக அமைந்த போது அழிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

1075131_587548481296791_864440329_nஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தை அகற்றினால் மட்டும் போதுமானது எனப் புலிகள் நம்பியிருந்தார்கள்.

ஏகாதிபத்தியங்கள் தொடர்பாகவும் போராட்டத்தில் மக்களை அணிதிரட்டுவது போன்ற அடிப்படைக் கோட்பாட்டுப் பிரச்சனைகளில் புலிகளிடம் எந்தக் குறிப்பான அரசியல் திட்டமும் இருந்திருக்கவில்லை.

இதனால் ஆயுதங்களும் இராணுவப் பயிற்சியும் புலிகளை அழிப்பதற்குப் போதுமானதாகவிருந்தது.

புலம்பெயர் நாடுகளிலிருந்த அமெரிக்க ஏகாதிபத்திய அடியாள் படைகள் புலிகளை நந்திக் கடலோரப்பகுதியில் முடக்கி அழிப்பதற்கு தமது எஜமானர்களுக்கு உதவின.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்கால் மூலை வரைக்கும் நகர்த்திச் சென்று முடக்குவதற்கு அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் புலம்பெயர் உளவாளிகளையே பயன்படுத்திக்கொண்டன.

USAID ,  பேர்கோப் பவுண்டேஷன் போன்ற தன்னார்வ நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்ட இவர்களில் பலர் அமெரிக்காவின் ஸ்டேட் டிப்பார்ட்மென்ட் புரோகிராம் எனும் நிகழ்ச்சியின் ஊடாக பயிற்றுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க அரசு புலிகளை அழித்துச் சுத்திகரிப்பதற்கான கால எல்லையை மிகத் தெளிவாகவே தீர்மானித்திருந்தத்து.

Mahinda-with-George-Bush

விக்கிலீக்ஸ் வெளியிட்ட கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் புலிகளை விரைவில் அழிக்குமாறு அமெரிக்க அதிபராகவிருந்த ஜோர்ஜ் புஷ் அழுந்தங்களை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே வேளை ஹில்லாரி கிளிங்டனின் ஆலோசராகவிருந்த Burns Strider என்பவர் அனுப்பிய மின்னஞ்சலை விக்கிலீக்ஸ் கசியவிட்டிருந்தது.

மின்னஞ்சலில் அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஐ.நா வைப் போன்று உலகைக் கட்டுப்படுத்த உருவாக்கிய நிதி நிறுவனங்கள் அல்லது கந்துவட்டி நிறுவனங்களான உலக வங்கியும், உலக நாணய நிதியமும் ராஜபக்ச அரசு புலிகளை அழிப்பதை விரும்புவதாகக் குறிப்பிட்டப்பட்டிருந்தது.

அது மட்டுமல்ல, இரண்டு தரப்பிலும் எவ்வளவு அழிவுகள் ஏற்பட்டாலும் புலிகளை அழித்து முடிக்க வேண்டும் என அவை விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். (இரண்டு தரவுகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன)

ஆக, சமாதானப் பேச்சுக்களை நடத்தியமை, புலிகளையும் மக்களையும் அழித்தமை, போர்க்குற்ற விசாரணை என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டு தமது ஏஜன்டுகளான ராஜபக்சவையே பதவி இறக்கியமை, மைத்திரி ரனில் போன்ற அடியாட்களை ஆட்சியிலமர்த்தியமை என்ற அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியதின் திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றன.

இன்றைய போர்க்குற்ற அறிக்கையும் அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று தான்.

போருக்குப் பின்னான இலங்கையை அமெரிக்க சாம்ராஜியத்தின் ஒரு பகுதியாக உருவாக்கும் பணியை ராஜபக்ச சரிவர மேற்கொள்ளாமையால் அவருக்கு மாற்றான ஒருவர் தேவைப்பட்டார்.

மைத்திரி – ரனில் கூட்டரசு அந்த அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இப்போது போர்க்குற்ற விசாரணை என்பது இலங்கை அரசைப் புனிதப்படுத்துவதற்காக மட்டுமே தேவைப்படும் நிலை தோன்றியுள்ளது.

அமெரிக்காவின் அடியாள் படைகளாகச் செயற்பட்ட அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஐ.நாவின் அறிக்கையைப் பாராட்டி அமெரிக்காவின் காலடியில் தமிழர்களை விழுந்து வணங்குமாறு கேட்கின்றனர்.

இவ்வாறான போர்க்குற்ற விசாரணைகளை மக்கள் மயப்படுத்தி ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் எடுத்துச் செல்வதற்குத் தடையாக புலம் பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன.

ஒரு பக்கத்தில் அமெரிக்கத் தீர்மானத்தை நிபந்தனையின்றி ஆதரிப்பவர்கள், மறுபக்கத்தில் அமெரிக்காவை இன்னும் ஆழமாகத் தலையிடுமாறு கையைப்படித்துக் கூட்டிவரும் அடியாள் படைகள் என்று அனைத்துத் தரப்பும் ஒரே நேர்கோட்டிலேயே இயங்குகின்றன.

போர்க்குற்ற அறிக்கையை உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளிடம் எடுத்துச் சென்று உலக மக்கள் மத்தியில் விழிபுணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் இவர்களிடம் இல்லை.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைக் கேட்டால் உள்ளக விசாரணை வேண்டாம், அமெரிக்காவே விசாரணைய நடத்திக்கொடுக்கட்டும் என அமெரிக்காவையே கேட்கிறார்கள்.

நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள், அமெரிக்காவின் வெற்றுத் தீர்மானத்தைப் பாராட்டுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பகுதியனரும், மக்களையும் புலிகளையும் திட்டமிட்டு அழித்த அமெரிக்காவை மேலும் அழிப்பு நடத்துமாறு கோருகிறார்கள்.

கடந்த ஆறு வருடங்களாக புதிய அரசியல் சக்திகளை வளர்ச்சியடைய விடாது தடுத்துவந்த இவர்களின் பணபலம் ஊடகங்களையும், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு அமைப்புகளையும் கட்டுபடுத்தி வைத்திருந்தது.

ஐரோப்பிய அமெரிக்க நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களின் பண உதவி இவர்கள் போராட்டத்தின் நியாயத்தையே அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

புலிகளை அழிப்பதற்கு உதவிய அதே மக்கள் விரோத அமைப்புக்கள் இன்று,ம் அமெரிக்க ஐரோப்பிய புலனாய்வு முகவர்கள் போன்று செயற்படுகின்றன.

மிகவும் தந்திரமான வகையில் இன்னும் அழிப்பில் ஈடுபடும் இக்குழுக்கள் அரசியலிலிருந்து அகற்றப்பட்டு மக்கள் சார்ந்த அரசியல் முன்வைகப்படும் வரை அழிவுகள் தொடரும்.

http://www.innercitypress.com/foia1hillarysri063015.html

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-bush-personally-had-encouraged-rajapaksa-to-pursue-defeat-of-the-ltte/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>