«
»
TwitterFacebookGoogle+

இந்து மதத்தில் மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!

மறுபிறவி அல்லது மறுபிறப்பு என்றாலே அதனைப் பற்றிய சில கவர்ச்சியான கருத்தமைவுகள் எப்போதும் நிலவும்.

ஒரு மனிதன் இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறப்பதைப் பற்றி இந்து மதத்தை போலவே புகழ்பெற்ற மற்ற சில கலாச்சாரங்களும் பேசுகிறது. உதாரணத்திற்கு, மறுபிறவியை புத்த மதமும் நம்புகிறது.

பழங்கால எகிப்தியர்கள் மரணத்திற்கான பின்பான வாழ்க்கையையும் மறுபிறவியையும் மிக தீவிரமாக நம்பினார்கள்.

அதனால் தான் இறந்த உடல்களைப் பாதுகாக்க அவர்கள் பல நினைவுச் சின்னங்களையும், மம்மிக்களையும் உருவாக்கினார்கள்.

இந்து மத தத்துவத்தின் படி, புனர்ஜென்மம் என அழைக்கப்படும் மறுபிறப்பு என்றால், மீண்டும் தசையுடனான வாழ்க்கைக்கு திரும்புவதே.

இந்து மதத்தில் மறுபிறவிக்கான புகழ் பெற்ற உதாரணம் ஒன்றை கூற வேண்டுமானால், அது தான் விஷ்ணு பகவானின் அவதாரங்களாகும். இந்த உலகத்தில், அதனை சுற்றியுள்ள தீய சக்தியிடம் இருந்து காக்க, மனித வடிவில் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுத்தார் அவர் என நம்பப்படுகிறது.

அதேப்போல், பல்வேறு பிற கடவுள்களைப் பற்றிய அவதார கதைகளையும் நாம் கேட்டிருப்போம்.

ஆனால் மறுபிறப்பு என்கிற இந்த கருத்தமைவு எப்படி வேலை செய்கிறது? மறுபிறவி பற்றிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான மற்றும் அருமையான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள, மேலும் படியுங்கள்.

26-1422253403-1-hindu7

ஆன்மா என்றால் என்ன? இந்து தத்துவப்படி, ஆத்மா என அழைக்கப்படும் ஆன்மாவை அழிக்க முடியாது.
ஒருவரின் உடல் இறந்தாலும் கூட, அவரின் ஆன்மா எப்போதும் உயிருடன் இருக்கும்.

எப்படி நாம் புதிய ஆடைகளை மாற்றுகிறோமோ அதே போல் தான் ஆன்மா உடல்களை மாற்றிக் கொள்ளும். நம் முன்வினைப் பயன், அதாவது, சென்ற ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் புதிய உடல் அந்த ஆன்மாவிற்கு கிட்டும்.

ஒருவர் பல புண்ணியங்களை சேர்த்திருந்தால், அவர் மீண்டும் மனிதனாக பிறப்பார்.
மறுபுறம், அவர் பல பாவங்களை செய்திருந்தால், முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர் பிறப்பார்.

26-1422253410-2-yoga-shakti

அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்: 1)

மனிதர்கள் பெரும்பாலும் மனிதர்களாகவே மீண்டும் பிறப்பார்கள். சில நேரங்களில் தன் முன்வினைப் பயனின் அடிப்படையில் அவர்கள் மிருகங்களாக பிறப்பார்கள்.

26-1422253416-3-ghost

அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்: 2)

நிறைவேறாத ஆசைகளுடன் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அவர் பேயாக அலைவார். அப்படிப்பட்ட ஆன்மாக்கள் நிஜத்திற்கும் ஆன்மீக உலகத்திற்கும் இடையே சிக்கி கொள்ளும். இதிலிருந்து விடுபடுவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் சாதகமான நிலையை தேடிக் கொண்டிருக்கும்.

26-1422253423-4-soul2

3) தங்களின் உடல் மட்டுமே அழியக்கூடியவை என இந்து மக்கள் ஆழமாக நம்புகின்றனர். சொல்லப்போனால், இந்து மதத்தில் உள்ள சாவு சடங்கில், இறந்த உடலின் தலையில் அடிக்கும் காரணம் அது தான்;
இந்த ஜென்மத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும். அடுத்த ஜென்மத்திலும் அந்த ஞாபகம் பின் தொடர கூடாது என்பதே அதற்கான காரணம்.
மனிதர்கள் எட்ட முடியாத உயரத்திற்கு இந்த ஆன்மாக்கள் சென்று, புதிய உடலுக்குள் நுழைந்து விடும் என நம்பப்படுகிறது,
26-1422253431-5-karma2
4) இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க ஒவ்வொரு மனிதனுக்கும் மீண்டும் மறுபிறவி எடுக்க 7 வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதன் படி, புண்ணியங்களை செய்யவும், பாவங்களை செய்யவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. அதன் படி, அவனின் மறு ஜென்மம் தீர்மானிக்கப்படுகிறது.

26-1422253440-6-soul

அறிந்திராத வேறு சில அருமையான தகவல்கள்: 5)
ஒரு உடல் இறந்தவுடன் மறு பிறப்பை தேடி அந்த ஆன்மா உடனே செல்லாது என்ற மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில வருடங்களுக்கு பிறகு, தங்களுக்கு சாதகமான நிலை அமையும் போது தான், புதிய உடலை ஒரு ஆன்மா கைப்பற்றி, மீண்டும் பிறக்கும்.
26-1422253447-7-spiritual

6) பிக்-பேங் நடைபெற்ற காலம் முதல், அனைத்துமே விஷயங்களுமே நம் புத்தியில் சேமிக்கப்பட்டு உள்ளது என சில முனிவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வெகு சிலராலேயே அவைகளை நினைவு கூற முடியும். அப்படியானால் நம் முந்தைய பிறப்புகள் பற்றிய ஞாபகங்களும் நம் ஆழ் மனதில் பதிந்திருக்கும். இது நம்மால் நினைவு கூறப்படாமலேயே போகலாம்.
26-1422253455-8-thirdeye
7) நம் நெற்றில் மூன்றாவது கண் உள்ளது என இந்துக்கள் நம்புகின்றனர். ஒருவர் தான் ஆன்மாவை கடவுளுடன் இணைக்கும் போதோ, அல்லது பிரம்மனாக மாறும் போதோ, இந்த கண்கள் திறக்குமாம். மனிதர்கள் தங்களின் மூன்றாவது கண்ணை திறக்கும் நிலை வரும் வரை, ஆன்மா இந்த உலகத்தில் இருந்து விடுபடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>