«
»
TwitterFacebookGoogle+

29 நவம்பர் 1947: இஸ்ரேலை ஸ்தாபிக்க பலஸ்தீனத்தை பலி கொடுத்த நாள்!!

மனித வர­லாற்றில் மிகவும் இருள் சூழ்ந்த தின­மாக 29 நவம்பர் 1947 பதிவாகி­யுள்­ளது.

அன்­றைய நாளில்தான் அமெ­ரிக்­காவின் அப்போதைய ஜனா­தி­பதி ஹரி.எஸ்.ட்ரூமன் தலை­மையில் வழி­ந­டத்­தப்­பட்ட, ஐரோப்­பிய ஏகாதிபத்தி­ய­வாத தலை­வர்கள், ஐக்­கிய நாடுகள் சபையை மிரட்டிப் பணிய வைத்து உலகின் பல இடங்­களில் நாடோ­டி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருந்த யூதர்­க­ளுக்­காக, அவர்கள் அது­வரை கண்­டு­கூட இருக்­காத பலஸ்­தீனம் என்ற நாட்டை பலஸ்­தீன மக்­க­ளி­ட­மி­ருந்து காவு கொண்டு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினர்.

ஐக்­கிய நாடுகள் சாச­னத்தை மட்­டு­மன்றி உலகில் அறி­யப்­பட்­டி­ருந்த ஏனைய சட்­டங்கள், தர்­மங்கள், தார்­மீக விழு­மி­யங்கள் மற்றும் கொள்­கைகள் என எல்­லா­வற்­றையும் குழிதோண்டிப் புதைத்­து­விட்­டுத்தான் இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அன்­றைய தினத்தில் தான் மனித விழு­மி­யங்கள் அனைத்­துமே சிதைவுற்றன.

இதன் மூலம் பலஸ்­தீ­னர்­களின் தாய­க­பூமி யூதக் குடி­யேற்ற வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு தாரை­வார்த்துக் கொடுக்­கப்­பட்­டது.

முஸ்­லிம்கள் செல்­வத்­தோடும் செல்­வாக்­கோடும் வாழ்ந்த மத்­திய கிழக்கை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற பிரிட்டிஷ் அர­சாங்க சதி முயற்­சியின் இறுதி அத்­தி­யாயம் எழு­தப்­பட்ட நாள் இன்­றுதான்.

இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட பின் இடம்­பெற்ற படு­கொ­லைகள், யுத்­தங்கள், இனச் சுத்­தி­க­ரிப்­புக்கள் எல்­லாமே பிற்­கா­லத்தில் மத்­தியகிழக்கை கொலைக்­க­ள­மா­கவும், சவக்­கா­டா­கவும் மாற்­றி­மையை வர­லாற்றில் காண முடி­கின்­றது.

1426604760446570000-(1)நடந்­தது இதுதான்:

19ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் இப்­போது இஸ்­ரே­லாக இருக்­கின்ற பலஸ்­தீனம் துருக்­கிய பேர­ரசின் ஒரு பகு­தி­யாக இருந்­தது.

1896ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் இங்கு வாழ்ந்த மக்­களுள் 95 வீத­மா­ன­வர்கள் அர­பிகள். இங்­கி­ருந்த காணி­களில் 90 வீதம் இவர்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­தா­கவே காணப்­பட்­டன.

இங்­குள்ள மக்கள் சத்­த­மிட்டுப் பேசு­வ­தையோ அல்­லது கெட்ட விட­யங்கள் பற்றி பேசு­வ­தையோ கேட்­பதுகூட கடினம். அந்­த­ள­வுக்கு அமை­தி­யா­கவும் கௌர­வ­மா­கவும் மக்கள் வாழ்ந்த காலம் அது.

1897 இல் சுவிட்­ஸர்­லாந்தின் பேஸில் நகரில் இடம்­பெற்ற முத­லா­வது உலக ஸியோ­னிஸ காங்­கிரஸ் மாநாட்டில் பலஸ்­தீ­னத்தில் யூத நாடு ஒன்றை உரு­வாக்க வேண்­டு­மென்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

பத்து வரு­டங்கள் கழித்து 1907இல் லண்டன் கால­னித்­துவ மாநாட்டில் மத்திய கிழக்கை கொந்­த­ளிப்பு நிலையில் வைத்­தி­ருக்கக் கூடிய விரோதப் போக்­கு­டைய ஒரு சக்­தியை ஸ்தாபிப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த சதித் திட்டம் தான் ஸியோ­னிஸ யூதர்­க­ளையும் பிரிட்­ட­னையும் ஒன்­றி­ணைத்­தது. முதலாம் உலகப் போர் இதற்­கான வாய்ப்பை அவர்­க­ளுக்கு வழங்­கி­யது.

இதன்­படி முதலாம் உலகப் போரில் இவ்­வி­ரண்டு தீய சக்­தி­களும் ஒன்றிணைந்து துருக்கிப் பேர­ர­சுக்கு முடிவு கட்­டின.

ஏற்­க­னவே திட்டமிட்­ட­படி 1917இல் பிரிட்­டனின் ஆதிக்­கத்தின் கீழ் பலஸ்­தீனம் கொண்டு வரப்­பட்­டது.

palestinian-loss-of-land-1946-2010இது இந்தப் பிர­தே­சத்தில் யூதக் குடி­யேற்­றத்­துக்கு வழி­வ­குத்­தது. குறிப்­பாக இங்கு பலஸ்­தீ­னர்கள் அடித்து விரட்­டப்­பட்ட பின் ரஷ்­யாவில் வாழ்ந்து வந்த யூதர்கள் குடி­யேற்­றப்­பட்­டனர்.

பிரிட்­ட­னி­னதும் ஸியோ­னிஸ யூதர்­க­ளி­னதும் சூழ்ச்சி பற்றி எதுவும் அறிந்­தி­ராத அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் நிரா­யு­த­பா­ணி­க­ளாக இவர்களை எதிர்த்­தனர்.

ஆனால் ஏற்­க­னவே இந்த எதிர்ப்பை எதிர்­பார்த்­தி­ருந்த குடி­யேற்ற யூதர்கள் ஹகானா, ஸ்டேர்ன், இர்குன், ஸ்வாய்­லுமி போன்ற பயங்கரவாதக் குழுக்­களை மத்­திய கிழக்கு பயங்­கரவாதத்தின் ஞானத் தந்­தை­க­ளான மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் ஆகியோர் தலை­மையில் உரு­வாக்கி பலஸ்­தீ­னர்­க­ளுக்குப் பதி­லடி கொடுத்­தனர்.

இந்தக் குழுக்கள் பலஸ்­தீ­னர்­களை கிராமம் கிரா­ம­மாகச் சென்று தேடித்­தேடி வேட்­டை­யா­டின.

பலஸ்­தீன மக்கள் மீது பயங்­க­ர­வா­தத்தை பிர­யோ­கித்து அவர்­களை அங்கிருந்து விரட்­டி­ய­டித்து அவர்­களின் காணி­களை கப­ளீ­கரம் செய்வதை குறி­யாகக் கொண்டு இந்தக் குழுக்கள் செயற்­பட்­டன.

arr_20enf_20g_934இந்த சதியின் ஓர் அங்­க­மாக மெனாச்சம் பெகின் தலை­மை­யி­லான குழு சிறுவர், பெண்கள் என்ற பேதம் கூட பார்க்­காமல் நூற்றுக்கணக்கான பலஸ்­தீ­னர்­களை கொன்று குவித்­தது.

ஜெரூ­ஸ­லத்தில் இருந்து ஒரு சில மைல் தூரத்தில் உள்ள டேர் யாஸின் என்ற கிரா­மத்தில் மட்டும் இந்தக் குழு 254 பலஸ்­தீன உயிர்களைப் பலி எடுத்­தது.

இந்தக் குழு­வுக்குத் தலைமை தாங்­கிய மெனாச்சம் பெகின் பின்னர் இஸ்­ரேலின் பிர­த­ம­ரானார். அவ­ருக்கு சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்­ட­மையும் வர­லாற்றில் பதி­வா­கி­யுள்­ளது.

டேர் யாஸின் படு­கொ­லைகள் மனி­த­குல வர­லாற்றில் இடம்பெற்ற மிக மோச­மான படு­கொ­லை­க­ளாகப் பதி­வா­கி­யுள்­ளன. வியட்­நாமில் இடம்­பெற்ற ‘மைலாய் படு­கொ­லை­க­ளுக்கு’ ஈடான ஒரு சம்­ப­வ­மா­கவும் இது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எந்த வித­மான உத­வி­க­ளு­மற்ற பலஸ்­தீ­னர்கள் ஆர்ப்­பாட்­டங்கள் செய்து இதை எதிர்த்து நின்­றனர். ஆனால், பிரிட்டிஷ் நிர்­வாகம் இந்தப் பிர­தே­சத்தில் தனக்­கி­ருந்த ஆணை, அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி அவர்­களை நசுக்­கி­யது.

அதையும் மீறி இந்த எதிர்ப்­புக்கள் மோச­மான கட்­டத்­துக்கு வந்தபோது இந்தப் பிர­தே­சத்தில் இருந்த தனக்கு விசு­வா­ச­மான அரபுக் கைக்கூலி ஆட்­சி­யா­ளர்­க­ளையும், இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­க­ளையும் பிரிட்டன் தூண்­டி­விட்­டது.

அச்சம் கொண்ட பலஸ்­தீ­னர்கள் தமது உயிரைக் காப்­பாற்ற ஓட்டம் பிடித்­தனர். அந்த ஓட்டம் அண்டை நாடு­களில் உள்ள அகதி முகாம்­களில் அவர்­களை கொண்டு போய் சேர்த்­தது.

இன்­னமும் அத்­த­கைய அகதி முகாம்­களில் அவல வாழ்வு நீடிக்­கின்­றது. போது­மான அளவு யூதக் குடி­யேற்­ற­வா­சிகள் கொண்டுவரப்பட்டதும் ஸியோ­னிஸ்ட்­டுகள் பலஸ்­தீ­னத்தைப் பிரிப்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையின் அங்­கீ­கா­ரத்தை பெறும் காரியங்களைத் தொடங்­கினர். தங்­க­ளுக்­காக இந்த அசிங்­கத்தை அரங்­கேற்­றத்தான் அவர்கள் அமெ­ரிக்­காவைப் பயன்­ப­டுத்­தினர்.

அன்­றைய கால­கட்­டத்தில் கருத்­தியல் ரீதி­யாகப் பிள­வு­பட்­டி­ருந்த அமெ­ரிக்­காவும் சோவியத் யூனி­யனும் பலஸ்­தீ­னத்­துக்குள் ஸியோனிஸ நாட்டை உரு­வாக்கும் இந்த காரி­யத்தில் காலம் கால­மாக கைகோர்த்து பணி­யாற்றும் படை­களைப் போல் ஒன்­றி­ணைந்­தன.

அன்­றைய உலகை ஆட்­டிப்­ப­டைத்த இரண்டு பெரிய வல்­ல­ர­சு­க­ளையும் ஸியோ­னிஸ்ட்­டுகள் எந்­த­ள­வுக்கு தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருந்­தனர் என்­ப­தற்கு இது ஒரு எடுத்துக் காட்­டாகும்.

இவ்­வா­றாக 1947 நவம்பர் 29இல் பலஸ்­தீ­னத்தை பிரித்து குடி­யேற்ற யூதர்­க­ளுக்­கான பாஸி­ஸ­வாத நாட்டை உரு­வாக்கும் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற ஐ.நா.வை அடி­ப­ணிய வைத்­தனர்.

வெளி­நா­டு­களைச் சேர்ந்த ஒரு குழு­வி­ன­ருக்கு தாம் வாழ வந்த பகு­தியில் ஒரு தேசத்தின் ஆள்­புல ஒரு­மைப்­பாட்டை பிரித்து சூறை­யாட அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது உலக வர­லாற்றில் இதுவே முதற் தட­வை­யாகும்.

இந்த உத்­தேச யூத நாட்டில் கூட அர­பிகள் தான் பெரும்­பான்­மை­யாகக் காணப்­பட்­டனர். மொத்த சனத்­தொ­கை­யான 1,008,900 இல் அரபு யூதர்கள் 509,780 ஆகவும் மற்­ற­வர்கள் 499,020 ஆகவும் காணப்­பட்­டனர்.

தமது நாடு பிளவுபடுத்­தப்­படும் ஐ.நா.தீர்­மா­னத்தை பலஸ்­தீன அர­பிகள் எதிர்த்­தனர். தமது தாய்­நாடு இரண்­டாகத் துண்­டா­டப்­ப­டு­வதை அவர்கள் விரும்­ப­வில்லை.

மன்னன் சாலமன் காலத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் விவி­லிய வேதநூல் கதையில் எப்­படி ஒரு பிள்ளை இரண்­டாகத் துண்­டா­டப்­பட்டு இரு­வ­ரிடம் கொடுக்­கப்­ப­டு­வதை விட அது மற்­ற­வ­ரி­டமே இருக்­கட்டும் என்று விட்டுக் கொடுத்து தனது தாய்­மையை ஒரு பெண் எப்­படி நிரூ­பித்­தாளோ அதே­போன்ற நிலையில் தான் பலஸ்­தீ­னர்கள் காணப்­பட்­டனர்.

ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த இடத்தில் நியாயம் வழங்க வேண்­டி­ய­வர்கள் மன்னன் சால­மனைப் போல் விவே­க­மா­ன­வர்­க­ளாகக் காணப்­ப­ட­வில்லை. மாறாக, அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய ஆதிக்கம் மிக்க உலகில் அவர்­களின் சதித்­திட்­டங்­களை எல்லாம் நியா­யப்­ப­டுத்தி வந்த ஐ.நா. சபைதான் இங்கு தீர்ப்பு சொல்லும் நிலையில் இருந்­தது.

ஐ.நா. மேற்­கொண்ட இந்த அநீ­தி­யான முடிவுபற்றி பிர­பல எழுத்­தா­ளரும் வர­லாற்­றி­ய­லா­ள­ரு­மான எச்.ஜி.வெல்ஸ் குறிப்­பி­டு­கையில், “இரண்­டா­யிரம் வரு­டங்­க­ளாக உலகில் இல்­லாத ஒரு யூத நாட்டை உரு­வாக்­கு­வது முறை­யெனில், ஏன் இன்னும் இரண்­டா­யிரம் ஆண்­டுகள் பின் சென்று கனா­னிய காலத்து நாடு ஒன்றை உரு­வாக்கி இருக்கக் கூடாது. யூதர்­களைப் போலன்றி கனா­னி­யர்கள் இன்­னமும் உள்­ளனர்” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இந்தப் பிரி­வி­னை­வாத தீர்­மா­னத்தால் துணிச்சல் கொண்ட ஸியோ­னிஸ்ட்­டுகள் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக பல படு­கொ­லை­களை தொட­ராகப் புரிந்­துள்­ளனர். இந்த யூத குழுக்­க­ளுக்கு எப்­போ­தெல்லாம் ஆயு­தங்கள் தேவைப்­பட்­டதோ அப்­போ­தெல்லாம் அதை அமெ­ரிக்கா தாரா­ள­மாக அள்ளி வழங்­கி­யது. இப்­போதும் அது தொட­ரு­கின்­றது.

ஸியோ­னிஸ படுகொலை­க­ளுக்கு நடுவே 1948 மே 14இல் இஸ்ரேல் என்ற நாடு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. ஐ.நா. தீர்­மா­னத்தை தொடர்ந்து மேலும் பெரு­ம­ள­வான பகு­திகள் இஸ்­ரே­லுடன் இணைக்­கப்­பட்­டன.

முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்­ட­வாறு இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்­கப்­பட்­டது. உலகின் மிகவும் கொடு­மை­யான ஒரு சக்­தி­யாக இஸ்ரேல் உரு­வாக்­கப்­பட்­டது.

ஐக்­கிய நாடுகள் சாசனம், மனித உரி­மைகள் பற்­றிய சர்­வ­தேச சாசனம் என எல்­லா­வற்­றையும் மீறி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யில்தான் இன்று இஸ்ரேல் அதன் இருப்­புக்­கான உரி­மை­யையும் கோரி நிற்­கின்­றது.

ஸியோ­னிஸ நாடு பிர­க­டனம் செய்­யப்­பட்டு 15 நிமி­டங்­க­ளுக்குள் அமெ­ரிக்­காவும் அதனைத் தொடர்ந்து சோவியத் யூனி­யனும் இஸ்ரேலை அங்­கீ­க­ரித்­தன. இந்த இரண்டு நாடு­க­ளுமே இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­துக்கு மிக முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கின என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

நியா­ய­மான சிந்­தனைப் போக்­குள்ள சக­லரும் இந்த அநி­யா­யத்தை பர­வ­லாக எதிர்த்­தனர், கண்­டித்­தனர். The New York Review of Books என்ற நூலில் ஐ.எப்.ஸ்டோன் என்­பவர் எழு­தி­யுள்ள கட்­டு­ரையில், “இந்த ஸியோ­னிஸ விட­யத்தில் எளி­மை­யான ஒரு நய­வுரை காணப்படுகின்றது.

2000 வருட பழை­மை­யா­ன­வர்­க­ளுக்­காக திடீ­ரென உரிமை கோரல்கள் விடுக்­கப்­ப­டு­வ­தாயின் முழு உலகும் மீண்டும் ஒரு தடவை மறுசீரமைக்­கப்­பட வேண்டும்.

ஸியோ­னிஸம் அதன் ஆரம்பம் முதலே அதன் குறிக்­கோள்­களை நிறை­வேற்றிக்கொள்ள அரபு உல­கில பாரிய பேர­ரசு ஒன்றின் ஒரு புறக்காவல் பிரி­வா­கவே செயற்­பட விரும்­பி­யுள்­ளது.

ஸியோ­னிஸ அரசு என்ற கருவை உரு­வாக்­கிய தியடோர் ஹெர்ஸ்ல் முதலில் சுல்­தான்­க­ளையே வெற்றி கொள்ள விரும்­பினார்” என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இஸ்ரேல், அது உரு­வாக்­கப்­பட்­டது முதல் அடுத்­த­டுத்த படு­கொ­லை­க­ளாலும், ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளாலும் மத்­திய கிழக்கை கொலைக்­க­ள­மாக மாற்­றி­யது.

1956இல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்­ப­ன­வற்­றுடன் இணைந்து இஸ்ரேல் எகிப்தை ஆக்­கி­ர­மித்­தது. 1967இல் சினாய், காஸா, தென் லெபனான், மேற்கு கரை, கிழக்கு ஜெரூ­ஸலம் மற்றும் கோலான் குன்று பிர­தேசம் என்­ப­ன­வற்­றையும் இஸ்ரேல் தன­தாக்கிக் கொண்­டது. இந்த ஆக்­கி­ர­மிப்பு யுத்­தங்கள் எல்­லாமே அமெ­ரிக்­கா­வி­னதும், ஐரோப்­பிய ஆத­ர­வா­ளர்­க­ளி­னதும், கொடுங்கோல் அரபு சர்­வா­தி­கா­ரி­க­ளி­னதும் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்­ட­வைதான்.

பலஸ்­தீ­னத்தில் அவர்கள் கால் பதித்­தது முதல் 65இற்கும் மேற்­பட்ட பாரிய படு­கொலைச் சம்­ப­வங்­களைப் புரிந்து ஆயி­ரக்­க­ணக்­கான அப்பாவி பலஸ்­தீ­னர்­களைக் கொன்று குவித்­துள்­ளனர்.

இதில் மிக அண்­மைய சம்­ப­வ­மாக 2014இல் ஜுலை மற்றும் ஆகஸ்ட் காலப்­ப­கு­தியில் காஸாவில் இடம்­பெற்ற படு­கொ­லை­களைக் குறிப்பி­டலாம்.

இது கடந்த ஆறு வருட காலத்தில் இடம்­பெற்ற மூன்­றா­வது பாரிய படு­கொலைச் சம்­ப­வ­மாகும். அரபு ஆட்­சி­யா­ளர்கள் குரு­டர்­க­ளா­கவும் ஊமை­க­ளா­கவும் இருந்து இதனை அனு­ம­தித்­துள்­ளனர்.

1970இல் ஐ.நாவால் ஸியோ­னிஸம் ஒரு வகை இன­வாதம் எனப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது.

ஆக்­கி­ர­மிப்பு, படு­கொ­லைகள், சட்­ட­வீனம் என்­பன இஸ்ரேல் வர­லாற்றில் அன்­றாட நிகழ்­வுகள் ஆகி­விட்­டன. குற்­றச்செ­யல்­களும் இரத்தக்­க­றை­களும் தான் அதன் வர­லாற்றுப் பக்­கத்தை நிரப்­பி­யுள்­ளன.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பூமியில் உலகில் எந்­த­வொரு பாகத்­தி­லி­ருந்து வந்த யூதர்கள் வேண்­டு­மா­னாலும் குடி­யே­றலாம் என்பதுதான் இன்­றைய நிலை.

ஆனால் இங்­குள்ள வீடு­களின் சாவி­களும் காணி­களின் உரிமைப் பத்­தி­ரங்­களும் பலஸ்­தீ­னர்­க­ளிடம் இன்­னமும் உள்­ளன. ஆனால் அவர்­க­ளுக்கு இங்கே வருகை தர முடி­யாது.

இஸ்­ரேல்தான் உலகில் நிரந்­தர எல்­லைகளற்ற ஒரே நாடு. அது மட்­டு­மல்ல, உல­கி­லேயே இங்கு மட்­டும்தான் படு­கொ­லை­க­ளுக்கு தலைமை தாங்­கி­ய­வர்­களும், யுத்தக் குற்றம் புரிந்­த­வர்­களும் மாறி மாறிப் பிர­த­மர்­க­ளா­கவும் ஜனா­தி­ப­தி­க­ளா­கவும் தெரிவு செய்­யப்­படும் விந்­தையும் நடக்­கின்­றது.

பலஸ்­தீ­னர்கள் தொடர்ந்து கொல்­லப்­ப­டு­கின்­றார்கள், காணிகள் தொடர்ந்து அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன, பிரத்­தி­யே­க­மான யூதக் குடியேற்றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பலஸ்­தீ­னர்­களின் வீடுகள் தகர்க்­கப்­ப­டு­கின்­றன. அவர்­களின் பண்­ணை­களும் விவ­சாய நிலங்­களும் வாழ்­வா­தா­ரங்­களும் சிதைக்கப்படுகின்­றன.

சட்­ட­வி­ரோத கைது­களும் சித்­தி­ர­வ­தை­களும் தொட­ரு­கின்­றன. 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லிய சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

காஸா பிர­தே­சத்தின் மீது எகிப்­திய சர்­வா­தி­கார இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களின் ஒத்­து­ழைப்­புடன் பல ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

எகிப்தில் மட்டும் 1.5 மில்­லியன் பலஸ்­தீ­னர்கள் நிர்க்­கதி நிலையில் உள்­ளனர். இவ்­வாறு இஸ்­ரேலின் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன.

ஐக்­கிய நாடுகள் சபையில் ஆகக் கூடு­த­லான தட­வைகள் கண்­ட­னத்­துக்கு உள்­ளான நாடு இஸ்­ரேல்தான். இது­வரை அந்த நாட்­டுக்கு எதிராக 120க்கும் மேற்­பட்ட கண்­டனத் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்­துக்கு மட்­டு­மல்ல, முழு உல­கி­னதும் ஸ்திரப்­பாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் ஒரே நாடு இஸ்­ரேல்தான்.

அமெ­ரிக்­கா­வி­னதும் ஐரோப்­பிய நாடு­க­ளி­னதும் ஆத­ரவு கார­ண­மாக இஸ்­ரே­லுக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாத நிலையில் ஐ.நாவும் உள்­ளது.

மேற்கு உலகில் மட்டும் அன்றி முழு உலகிலும் அரசியல், பொருளாதாரம், நிதி, ஊடகம், களியாட்டம் மற்றும் உள்ள எல்லாத் துறைகளையும் ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தியாக இஸ்ரேல் மாறியுள்ளதால் நீதி வழங்க வேண்டிய எல்லா சர்வதேச ஜூரிமார்களும் வேறு கதியின்றி மௌனம் காத்து வருகின்றனர்.

பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ராக அந்தப் பிராந்­தி­யத்தில் புரி­யப்­பட்ட மற்றும் புரி­யப்­பட்டு வரு­கின்ற எல்லாக் குற்­றங்­க­ளிலும் அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய நாடு­களின் பங்­க­ளிப்பும் காணப்­ப­டு­கின்­றது.

இதுதான் யதார்த்தம். ஆனால் அமெ­ரிக்க நெருக்­கு­த­லுக்கு அடி­ப­ணிந்து அரபு ஆட்­சி­யா­ளர்­களும் அப்­பாவி பலஸ்­தீ­னர்­களைக் கைவிட்­டுள்­ளமைதான் பெரிதும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

பல அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களும் கூட பலஸ்­தீ­னர்­களை கைவிட்டு விட்டு அவ­சர அவ­ச­ர­மாக ஸியோ­னி­ஸத்தை தழுவி வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

இன்­றைய சூழலில் ஒருசில லத்தீன் அமெ­ரிக்க நாடு­களைத் தவிர பலஸ்­தீ­னர்­க­ளுக்கு குரல் கொடுக்கக் கூடிய எவரும் உலகில் இல்லை. பலஸ்­தீ­னர்கள் மேலைத்­தேச ஊட­கங்­களால் பயங்­க­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்­டுள்­ளனர்.

தமது பத­வி­க­ளையும், மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளையும், அனு­ப­வித்து வரும் வச­தி­க­ளையும் காப்­பாற்றிக் கொள்ள அரபு ஆட்­சி­யா­ளர்கள் பலஸ்­தீ­னர்­களை ஒட்­டு­மொத்­த­மாக அடகு வைத்­துள்­ளனர் அல்­லது விற்­பனை செய்து விட்­டனர்.

இலட்­சக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்­களை அடித்து துரத்தி அகதி முகாம்­க­ளுக்குள் தஞ்சமடைய வைத்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் என்பன இணைந்து உருவாக்கியுள்ள இன்றைய மத்திய கிழக்கு இதுதான்.

-லத்தீப் பாரூக்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>