«
»
TwitterFacebookGoogle+

வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!!: அமெரிக்க C.I.A யின் கூலிப்படையாக செயல்பட்டு ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பிரபாரன்!! (வீடியோ ஆதாரம்)

கூலிக்காக ராஜீவகாந்தியை கொலைசெய்து தன் போராளிகளை, தமிழர்களின் இலச்சியமான, ஈழம் என்ற கனவை நசுக்கிய கொடுமையை பாருங்கள்!!

பிரபாகரன் என்ற நபரின் தனிப்பட்ட நபரின் பேராசையால் அமரிக்க உளவுத்துறை என்ற வல்லாதிக்க ஆக்டொபஸின் அகோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாக ஈழ விடுதலை, தன்னை அறியாமல் சதி வலையில் சிக்கிய பிரபாகரன்,

1280x720-XAfராஜீவை கொலை செய்ய தங்கள் உயிர்களை இழந்த தனு, சிவராசன்,சுபா, நேரு,குண்டு சாந்தன், அரசன்,குலத்தான், டிக்சன்,குணா, ஜமீலா,சுரேஷ், மற்றும் பெங்களூரில் தங்கி சிகிச்சை எடுத்துவந்த போரில் காயம்பட்ட 22 போராளிகள் இன்னும் பல ஈழ தமிழர்கள் இறந்தார்கள்,

பேரறிவாளன்,நளினி போன்ற இந்திய தமிழர்கள் வாழ்நாள் சிறையில் விழுந்தார்கள், 19 அப்பாவி தமிழக தமிழ் மக்கள் உடல் சிதறி இறந்து போனார்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்,

இந்தியாவிற்கு செய்த துரோகம்  மட்டுமல்ல. தமிழக தமிழர்களுக்கு செய்த துரோகம் இது.

கோகிலா என்ற சிறுமியை பார்த்திருப்பீர்கள் அவள் தாய் லதாக்கண்ணன் அவர்களின் பின்னே அவர்களை அரணாக கொண்டுதான் ராஜீவை நோக்கி முன்னேறினாள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்ட தனு.

அந்த சிறுமியும் அவளது தாயும் என்ன பாவம் செய்தார்கள் ? உடல் சிதறி தாயும் மகளும் இறந்துபோனார்கள், ,

ஏன் தெரியுமா அமெரிக்காவின் சதி வலையில் விழுந்த பிரபாகரனால், இந்த கொலைக்கு சொல்லப்பட்ட காரணம் இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்கள் எனச்சொல்லப்பட்டது.

ஆனால் திரைமறைவில் பிரபாகரன் செய்தது அமெரிக்காவின் உளவுநிறுவனத்தின் பணம் ஆயுதத்துக்கு ஆசைப்பட்டு நடத்திய படுபாதக செயல் ராஜீவ்காந்தி கொலையாகும்.

11-eelam-31(சிங்கள இனவாத கட்சி தலைவரான பிரேமதாசாவுக்கு கூலிப்படையாக செயல்படுவதற்கான  பேச்சுவார்த்தையில் அன்ரன் பாலசிங்கம்.)

இதேபோன்றுதான் பிரமதாசா கொடுத்த காசுக்கும், ஆயுதத்துக்கும் ஆசைப்பட்டுதான்  இந்திய அமைதி  எதிராக பிரபாகரன் சண்டை செய்தார்.

இந்திய அமைதிப்படையை மக்கள் மத்தியில் ஒளிந்துகொண்டு தாக்கி ஆக்ரோஷ படையாக மாற்றிவிட்டு பாதுகாப்பாக பிரபாகரன் நல்லூர் முருகன் கோயிலில் பெண்களுடன் பெண்களாக புடவை கட்டி பெண்வேடம் போட்டுக்கொண்டு ஒளிந்து கிடந்தபோது கருணா கிழக்கில் இருந்துவந்து காப்பாற்றி மணலாறு காட்டில் கொண்டு பிரபாவை பாதுகாப்பாக விட்டார்.

இந்த உண்மைகளை முறிந்தபனை என்ற புத்தகம் எழுதிய யாழ்ப்பாண மருத்துவ பீட விரிவுரையாளர் லண்டனில் படித்து போராளிகள், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய தமிழ் பெண் மருத்துவர் ராஜனி_திரானகம என்ன ஆனார் தெரியுமா ..?

ஒரு கை குழந்தையின் தாய் என்றும் பாராது அவரை தன் உளவுத்துறை நபர் போஸ்கொ என்பவரால் சுட்டு படுகொலை செய்து, அவர் எழுதிய புத்தகங்களை நெருப்பில் போட்டு எரித்து உண்மைகளை மறைக்க முயன்றவர் இந்த பிரபாகரன்.

பின்னர் கதை,திரைக்கதை,வசனத்துடன் பிரபாகரன் அரசியல் துறை எழுதிய சாத்தானின் படை புத்தகம் உலகம் முழுக்க உலவியது.

,rajaniமுறிந்தபனை ஆசிரியர் ராஜனி

இப்போது அந்த முறிந்தபனை புத்தகம் தமிழகத்தில் கிடைக்கிறது வாங்கி படித்து பார்த்தல் தெரியும் இந்தியப்படைகள் என்ன செய்தார்கள் என்று, குறிப்பாக தமிழக மக்களுக்கு செய்த துரோகம்,

சரி ஒரு பேசசுக்கு பழிவாங்குவது என்று வைத்து பாப்போம் வியட்நாமில் அமேரிக்கா செய்த கொடூரம் உலகம் அறிந்தது, அதற்காக ஹோசிமின் அமெரிக்க அதிபர்களை கொலைசெய்து இருந்தால் இன்று வியட்நாம் நிலை என்னவாக இருக்கும்?

அருகில் இருப்பது ஒரே நாடு அதன் ஆதரவு எப்போதும் வேண்டும் என்று சிறு அறிவுகூட இல்லாமல் இந்திய புலனாய்வுத்துறையை எளிதாக கணக்கு போட்டு செய்த தவறு.

அதே அமேரிக்கா முள்ளிவாய்க்கால் வரை பிரபாகரனை ஓடவிட்டது, அப்போதும் பிரபாகரன் தனியாக ஓடவில்லை பொது மக்களை கடத்தி மனிதக்கேடயமாக பிடித்துக்கொண்டு ஒளிந்துகொள்ளும் சூழல் உருவானது.

ஒரு விடுதலை போராட்ட இயக்கம் பணத்துக்காக ஆயுதத்துக்காக கொலை செய்தால் அது நிச்சயம் ஒரு கூலிப்படைதான், அதற்க்கு முழு பொறுப்பு பிரபாகரன் என்ற பாசிச நபரையே சேரும்.

பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்பதை அவரின் திருமணமே சொல்லும் இயக்கத்தின் முதல் தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரன் அவர் #ஊர்மிளா என்ற இயக்கத்தின் முதல் பெண் உறுப்பினரை காதலிப்பதாக சொல்லி அவரை விரட்டிவிட்டு இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வந்த பிரபாகரனுக்கு மட்டும் மதிவதனியுடன் காதல் வந்ததும் இயக்க விதிகள் திருத்தப்பட்டன.

ஆக பிரபாகரன் என்ற ஒற்றை நபர் ஒரு இனத்தின் பிரதிநிதியாக சொல்லிக்கொண்டு ஆயுதம் தூக்கியவர், அவரின் விருப்பு வெறுப்பு தான் இயக்கத்தின் முடிவாக இருந்தது, ராஜீவை பணம் வாங்கிக்கொண்டு கொலை செய்தது இறந்துபோன தாணுவுக்கு கூட தெரியாது பாவம்

அவருக்கு மூளைச்சலவை சொல்லப்பட்டது வேறுகதை,

20110903-TOD-91யார் இந்த தனு தெரியுமா ? தமிழரசு கட்சியின் பிரமுகர் ராஜரெத்தினத்தின் மகள் வசதியான குடும்பம், தனுவின் சகோதரி இன்றும் கனடாவில் உள்ளார்.

அவர்கள் குடும்பம் எவ்வித பாதிப்புக்கும் இந்தியப்படைகளால் ஆனது கிடையாது, இறந்து போன தனு பயியிற்சிகொடுத்ததே இந்தியாதான், அவ்வாறு இருக்க தனுவை கற்பழித்தாகவும் அதனால் அவர் கரும்புலியாக மாறியதாகவும் அவரின் கற்பை கூட தங்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொண்டார் பிரபாகரன்,

ஒருவர் விடாமல் மாற்று அரசியல் தலைவர்களை கொலைசெய்து தனி ஒருவராக இருந்த பிரபாகரன் மக்கள் உயிர்களை, தன் மக்களை,போராளிகளை எவ்வாறு நடத்தினார் என்று புலிகள் அமைப்பின் பெண் அரசியல் துறை தலைவராக இருந்து பின் ராணுவத்திடம் சரணடைந்து சமீபத்தில் புற்றுநோயால் இறந்து போன #தமிழனி எளிதிய ஒரு_கூர்வாளின்_நிழலில் இருந்து என்ற புத்தகம் விரிவாக விவரிக்கிறது.

மில்லியன் கணக்கில் ஆயுதம் வாங்கிய பிரபாகரன் பெண் போராளிகளுக்கு நல்ல உடைகளை கொடுக்காமல் கிழிந்துபோன நைந்துபோன உடைகளுடன் அவர்கள் களத்தில் இருந்த கொடுமையை பதிவு செய்கிறார்,

பிரபாகரன் மகன் மூத்த தளபதிகளை எடுத்து எரிந்து பேசுவதும் குழந்தைகளை வலுக்கட்டாயாமாக பிடித்துவந்து சண்டை போட சொன்னதும், போர்க்களத்தில் தப்பிக்க பார்த்த தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை சுட்டு கொலை செய்ய சொன்னதும் அவர் பதிவுசெய்து உள்ளார்,

இதுதான் போராட்டமா?

போராட்டம் மக்களுக்கா?

மக்கள் போராட்டத்துக்கா ?

அன்று விரோதிகள் இன்று நெருங்கிய ராணுவ கூட்டில் உள்ள இந்திய அமெரிக்க உறவு உலகம் அறிந்தது, வல்லாதிக்க அரசியல் ஆட்டங்களில் பணத்துக்கு பலியாகிவிட்டு மற்றவர் மேல் பழி போட்டு ஐரோப்பாவில் அங்கிருந்து அனுப்பும் காசுக்கு தமிழகத்தில் கிடந்து மேடையில் கத்தி என்ன ஆகப்போகிறது ?

தமிழச்சி
26/01/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>