«
»
TwitterFacebookGoogle+

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை!!: சுவிஸ் வாழ் ”புலி மபியா” குழுக்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா??

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி,  ஆறாவது சாட்சியாளரான  முகமட் இவ்லார் என்பவர்  சாட்சியத்தில் சொல்லப்பட்ட விடயங்களை  நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால்… சில உண்மைகள் தெளிவாகும்..

முகமட் இவ்லார் அளித்த வாக்கு மூலம்:   வீடியோ பதிவு செய்தமை தொடர்பில் சுவிஸ் குமாரிடம் நான் வினவியபோது, இருபது வயதுக்குட்பட்ட அழகான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்து அதனை நேரடியாக ஔிப்பதிவு செய்து தருமாறு சுவிஸிலுள்ள மாபியா குழுவொன்று கேட்டிருந்ததாக அவர் சொன்னார்..

இந்த ஆதாரத்தின்  அடிப்படையில்….நாம்  இவ்வழக்கை ஆராய்ந்து பார்ப்போமானால்..

• சுவிஸ் குமார்  கூறிய சுவிஸில் உள்ள மாபியா குழு யார்??

• சுவிஸில் காசுக்காக இயங்கும் மபியா குழுக்கள் ஒரு பெண்ணை கற்பழித்து, கொலை செய்து  வீடியோ படமெடுத்து தரும்படி சுவிஸ் குமாரிடம் கேட்பதற்கு  எந்தவித காரணமும் கிடையாது.

• பணத்துக்காக  இயங்கும் மபியாகுழுக்கள்.. தூள் கடத்தல், வைரம், பணம், ஆட்கடத்தல்  போன்ற செயல்களையே செய்வார்கள்.

• ஆபாச படமெடுத்து விற்பவர்கள் என்றால் 9பேர் சேர்ந்து  ஒரு பெண்ணை  கற்பழிக்கமாட்டார்கள்.

• இலங்கையில், அதுவும் ஒரு தமிழ் பெண்ணை கற்பழித்து, படுகொலை செய்து  வீடியோ படமெடுப்பவர்களின்  நோக்கம்  என்ன??

• இப்படிப்பட்ட  செயல்களை செய்து, இலங்கை இராணுவத்தினர்கள் மீது பழியை போட்டு, வெளியுலகுக்கு காட்டுவதன் மூலம், இலங்கை   இராணுவத்தினர்கள் மீது பாரிய களங்கத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்களா??

அப்படி நடந்திருந்தால்…..?? “கட்டாயம் அது புலம்பெயா் தேசங்களில் வாழும் புலிக் கிரிமினல்களின் வேலையாகதான் இருக்கும். புலிக்கிரிமினல்கள்தான்   இப்படிபட்ட   கிரிமினல்  வேலைகளை திட்டமிட்டு   செயல்படுத்துவார்கள்.

• சுவிஸ் குமார் என்பர்  தீவிர புலியாதரவாளராம். சுவிஸ் புலி மபியா குழுக்கள் இச்செயலை செய்வதற்கு  சுவிஸ் குமாரை பயன்படுத்தியிருக்கலாம்.

• அல்லது இக்கொடிய செயலை புங்குடுதீவில் உள்ள கடற்படையினர்களே  செய்திருக்கலாம். இப்படிப்பட்ட  கொடிய  செயலை செய்வதற்கு இராணுவத்தினர்கள் தயங்கமாட்டார்கள். அதை மறைக்க அப்பாவிகளை  சிறையில் பிடித்து அடைத்து  வைத்து  சாட்சியங்களை உருவாக்கி  இதை மூடிமறைக்கலாம்.

• இப்படிப்பட்ட செயல்களை செய்ய  அல்லது மறைக்க  இலங்கை அரசபடையினருடனும் சுவிஸ் மபியா புலி குழுக்கள் பேரம்பேசியிருக்கலாம்.

பொறுத்திருந்து பார்போம்  உண்மை வெல்லுமா?? என்பதை…

………………………………………………………………………….

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 2015 ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் படுகொலை செய்யப்பட்ட வித்தியா எனும் பாடசாலை மானவியின் வழக்கு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில், யாழ்ப்பாணம் மேல் நேதிமன்றில் ட்ரியல் அட் பார் முறையில் விசாரிக்கப்பட்டு வருவது தெரிந்ததே.

இந்த வழக்கின் சாட்சிகளாக மொத்தம் நாற்பத்தொன்பது சாட்சிகள் இருந்த நிலையில் நிலையில் இதுவரை நாங்கு சாட்சிகளின் சாட்சியங்களே பதிவாகியுள்ளன.

இன்னும் நாற்பத்தைந்து சாட்சிகளும், DNA மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் அவரது சாட்சியமும், பொலிஸ் அறிக்கை மற்றும் சாட்சியமும் என கட்டம் கட்டமாக மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றன.

அந்த வகையில் ட்ரியல் அட் பார் மன்றின் மூன்றாவது நாளான நேற்றைய தினம் ஆறாவது சாட்சியாளரின் சாட்சி பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இம்மாதம் மூன்றாம் திகதிவரை வழக்கு விசாராணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

ஆறாவது சாட்சியாளரின் சாட்சியத்தில் சொல்லப்பட்ட விடயங்களும் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்த ஆறாவது சாட்சியாளர் வேறொரு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபராவார். முகமட் இவ்லார் எனும் இந்த நபர் ஒரு மென்பொருள் பொறியியலாளர் ஆவார்.

வவுனிய சிறையில் அடைபட்டிருந்தபோது சுவிஸ் குமாருடன் இவருக்கு தொடர்புகள் ஏற்பட்டிருந்தன என்பதற்காகவும் அந்தக் காலத்தில் சுவிஸ் குமாருடன் பேசிக்கொண்ட விடயங்களை அறிவதற்காகவும் இந்த வழக்கின் சாட்சியாளரானார்.

வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாருடன் தமக்கு தொடர்புகள் ஏற்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த வழக்கை நெறிப்படுத்தும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி.சில்வா வவுனியா சிறையில் தன்னை சந்தித்து கலந்துரையாடியதை அவதானித்த சுவிஸ் குமார் அவருடனான கலந்துரையாடல் குறித்து தம்மிடம் வினவியதாகவும் குறிப்பிட்ட அவர்,

”மென்பொருளை பயன்படுத்தி அழிக்கப்பட்ட வீடியோக்களை மீள தரவிறக்கம் செய்ய முடியுமா என சுவிஸ் குமார் என்னிடம் வினவினார்.

அதற்கு நான், என்னால் செய்ய முடியும் என்று கூறினேன். இந்த சந்திப்பு இடம்பெற்ற மறுநாள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள பிறிதொரு வழக்கிற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுவிட்டனர்.

15 நாட்களின் பின்னர் மீண்டும் என்னை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றினார்கள்.

அதன் பின்னர் சுவிஸ் குமார் பதட்டத்துடன் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடினார். குறிப்பாக ஏன் நாட்கள் கடந்தது? குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனரா? என சுவிஸ் குமார் என்னிடம் வினவினார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் என்னைச் சந்தித்துப் பேசியதாக அவரிடம் கூறினேன்.

பின்னர் இந்த விசாரணைகள் தொடர்பில் ஏனைய 8 சந்தேகநபர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டாம் எனவும் சுவிஸ் குமார் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தான் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு விருப்பமாகவுள்ளதாகவும் அதனை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி.சில்வாவிற்கு தெரிவிக்குமாறும் சுவிஸ் குமார் தெரிவித்தார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறினால் தான் விடுதலையாகி சுவிசர்லாந்துக்கு திரும்பி செல்ல முடியும் எனவும் இதற்கு இரண்டு கோடி ரூபா வழங்க முடியும் எனவும் சுவிஸ் குமார் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை நான் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி.சில்வாவிடம் கூறியதை அடுத்து தொடர்ந்தும் சுவிஸ் குமாருடன் கலந்துரையாடி மேலதிக தகவல்களை பெறுமாறு அவர் என்னைப் பணித்தார்.

வீடியோ பதிவு செய்தமை தொடர்பில் சுவிஸ் குமாரிடம் நான் வினவியபோது, இருபது வயதுக்குட்பட்ட அழகான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்து அதனை நேரடியாக ஔிப்பதிவு செய்து தருமாறு சுவிஸிலுள்ள மாபியா குழுவொன்று கேட்டிருந்ததாக அவர் சொன்னார்..

இதற்காக புங்குடுதீவைச் சேர்ந்த ஆறாவது சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துஷாந்த் உதவி புரிந்தார் என்றும் வவுனியா சிறைச்சாலைக்குள் வைத்து அவரையும் சுவிஸ் குமார் அடையாளம் காட்டியுள்ளார்.” என்று குறிப்பிட்ட சாட்சியாளரிடம், அந்த சந்தேகநபரை இன்று உங்களால் அடையாளம்காட்ட முடியுமா என நீதிபதி கோரியபோது குறித்த சந்தேகநபரை சாட்சியாளர் அடையாளம் காட்டினார்.

மேலும் தனது சாட்சியங்களைப் பதிவு செய்த சாட்சிய்யாளர்,

”அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட காணொளி, கூகுள் ட்ரைவ் ஊடாக சுவிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து உதவிகள் கிடைத்ததாகவும் சம்பவம் நடைபெற்ற போது தான் கொழும்பிலிருந்ததாகவும் வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பில் இல்லை எனவும் சுவிஸ் குமார் என்னிடம் குறிப்பிட்டார்.

வித்தியா கொலை செய்யப்பட்டதன் பின்னரே தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாகவும் பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரின் தம்பியின் செல்வாக்கில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் கொழும்பிற்கு தப்பிச்சென்றதாகவும் சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.

இவை பற்றி கொழும்பு மகசின் சிறையில் வைத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த டி.சில்வாவிடம் வாக்குமூலம் நான் வழங்கினேன்.

இதையறிந்த சுவிஸ் குமார் என்னைக் கொல்லப்போவதாக கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நான் அறிவித்திருந்தேன்.

அதே நேரம் வித்தியாவை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்ய தெரிவு செய்யப்பட்ட பாழடைந்த அந்த வீடு தன்னுடையது என சுவிஸ் குமார் என்னிடம் கூறியிருந்தார்.

அந்த பாழடைந்த வீட்டுக்கு அருகில் கடற்படை முகாம் அமைந்துள்ளதனால் இந்தக் கொலையை கடற்படையினரே மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டலாம் என அவர்கள் திட்டமிட்டிருந்திருக்கிறார்கள்.”

மேற்கண்டவாறு வழக்கின் ஆறாவது சாட்சியாளர் முகமட் இவ்தார் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து அவரிடம், சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மூன்று பேர் குறுக்கு விசாரனைகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் யாவும் இம்மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு சந்தேக நபர்களை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>